டி.சுப்புலாபுரம் -- டி.புதூர் ரோடு ரூ. 51 லட்சத்தில் புதுப்பிப்பு

ஆண்டிபட்டி : டி.சுப்புலாபுரம் முதல் டி.புதூர் வரை 1.5 கி.மீ., தூரத்திற்கு ரோடு புதுப்பிக்கும் பணி துங்கியுள்ளது. 2024--25ம் ஆண்டு தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.51.36 லட்சம் செலவில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. டி.புதூர் அருகே மலைக்கரடை ஒட்டிய பகுதியில் ரோடு 50 மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் இருப்பதால் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ரோடு புதுப்பிக்கப்படுவதில்லை. தொழில்துறையில் வளர்ந்து வரும் டி.சுப்புலாபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை இருந்தும் டி. சுப்புலாபுரம் - டி.புதூர் இணைப்பு ரோட்டில் பஸ் வசதி இல்லை. ரோடு புதுப்பிக்கும் பணிகள் முடிந்தபின் இந்த ரோடு வழியாக பஸ் போக்குவரத்து துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement