மூதாட்டி மரணம்: போலீஸ் விசாரணை

தேனி : தேனி அருகே வயல்பட்டி மந்தையம்மன் கோயில் தெரு சரஸ்வதி 60, இவரது கணவர் பால்சாமி 62. இத்தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்தனர். இவர்களது மகன் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் 35, முதல் மனைவி சூர்யாவை பிரிந்து, முத்துக்கிளி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் செந்தில்குமார், தாயார் சரஸ்வதியிடம் சொத்து, பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பால்சாமி வீரபாண்டி போலீசில் மகன், மனைவியை தாக்கி கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார்.

பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று காயங்களுடன் இறந்து கிடந்த சரஸ்வதி உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement