மாநில அளவிலான கிரிக்கெட்  போட்டி ராமநாதபுரம் அணி வெற்றி

ராமநாதபுரம் ; -ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் லீக் போட்டியில் ராமநாதபுரம் அணி வென்றுள்ளது.

நேற்று 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ராமநாதபுரம் அணியும் அரியலுார் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அரியலுார் அணி 25.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்தது.

ராமநாதபுரம் அணியை சேர்ந்த தமிழ்செல்வன் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் ஆடிய ராமநாதபுரம் அணி 30.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் பெற்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தீபக் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்திருந்தார். அரியலுார் அணியில் பரணிதரன் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கரூர் அணி 39.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்தது. திருப்பூரை சேர்ந்த ஸ்ரீதருண் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பின்பு பேட்டிங் செய்த திருப்பூர் அணி 14.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சச்சின் 27 ரன்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement