செய்தி சில வரிகளில்
ராஜிவ் நினைவு தினம்
திண்டுக்கல் : முன்னாள் பிரதமர் ராஜிவ் 34வது நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் முன்னாள் மாநகர தலைவர் சொக்கலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள் பஸ் ஸ்டாண்டில் ராஜிவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கலெக்டர் ஆய்வு
வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு நடத்தினார். காணப்பாடியில் மக்கள் நலப்பணியாளர் கதிரேசன் தோட்டத்தில் ஆர்கானிக் முறையில் 2.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த டிராகன் பழத்தோட்டம், வேலாயுதம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம், கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டும் பணி, பாகாநத்தத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம், குண்டாம்பட்டியில் பசுமை கூடார வீரிய வெள்ளரி பண்ணை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தாசில்தார் சிக்கந்தர் சுல்தான், பி.டி.ஓ.,க்கள் கண்ணன், சுப்பிரமணி உடனிருந்தனர்.