'கரன்ஸ் கிளாவிஸ்' எம்.பி.வி., சொகுசு பயணத்திற்கு கியாவின் 'தங்க சாவி'

'கியா' நிறுவனம், அதன் 'கரன்ஸ்' எம்.பி.வி., காரை மேம்படுத்தி, 'கரன்ஸ் கிளாவிஸ்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. 'கிளாவிஸ்' என்பதற்கு 'தங்க சாவி' என்று பொருள். பழைய கரன்ஸ் காருடன் இணைந்து இந்த காரும் விற்பனையில் இருக்கும்.
பழைய கரன்ஸ் காரின் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், முன்புற 'டிஜிட்டல் டைகர் நோஸ்' கிரில், 'ஸ்டார்மேப்' எல்.இ.டி., லைட்டுகள் மற்றும் கனெக்டட் டெயில் லைட், 'ஐஸ் க்யூப்' எல்.இ.டி., ஹெட் லைட்டுகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள வெளிப்புற மாற்றங்கள்.
உட்புறத்தில், புதிய டூயல் டோன் டேஷ் போர்டு, 12.3 அங்குல டூயல் டிஸ்ப்ளே, முன்புற வெண்ட்டிலேட்டட் சீட்கள், எலக்ட்ரானிக் டிரைவர் சீட்கள், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், முன் சீட்டை நகர்த்த 'பாஸ்' மோட், 216 லிட்டர் பூட் ஸ்பேஸ், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, வயர்லெஸ் கார் இணைப்பு வசதிகள் மற்றும் சார்ஜிங், பேனரோமிக் சன்ரூப், 64 நிற உட்புற அலங்கார விளக்குகள், ஏர் பியூரிபையர், கேப்டன் சீட்கள் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இந்த கார், 1.5 லிட்டர், என்.ஏ., பெட்ரோல், 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று இன்ஜின்களில் கிடைக்கிறது. இன்ஜின் வகை பொறுத்து, 6 ஸ்பீடு மேனுவல், ஐ.எம்.டி., மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார், மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஜின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 1.5 லிட்டர், டீசல்
பவர் 160 ஹெச்.பி., 16 ஹெச்.பி.,
டார்க் 253 என்.எம்., 250 என்.எம்.,
மைலேஜ் 16 கி.மீ., 19 கி.மீ.,
மேலும்
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
-
மத்திய அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்!
-
சென்னை புகார் பெட்டி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது!
-
இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மாத்திரை அமைச்சர் உத்தரவிட்டும் தொடரும் அவலம்
-
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி