உறவினர் கத்தியால் குத்தி கொலை: தொழிலாளி கைது

எரியோடு:எரியோடு அருகே விழாவில் வைத்த பிளக்ஸ் பேனர் தொடர்பாக மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்த கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாகையகோட்டை அருகே என்.பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி 32.

புதுரோட்டில் கதவு, ஜன்னல் தயாரிக்கும் மர தச்சுக்கடை நடத்தி வந்தார்.

இவரும், உறவினரான கட்டட தொழிலாளி தனபால் 31 ,உள்ளிட்ட மூவர் நேற்று மாலை பள்ளிக்கூடத்தானுார் செட்டிக் குளத்தில் மது குடித்தனர். அப்போது சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் நடந்த விழாவில் வைத்த பிளக்ஸ் பேனரில் இடம் பெற்ற படங்கள் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனபால் கத்தியால் மருதுபாண்டியை குத்தி கொலை செய்தார். தனபாலை எரியோடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement