காளியம்மன் கோயிலில் பூக்குழி

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு கையில் குழந்தைகளுடன், அம்மன், கருப்பணசுவாமி வேடமிட்டும் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர் கோயில் வைகாசி திருவிழா மே 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது.

காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், அம்மன், கருப்பணசுவாமி வேடமணிந்து 200க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மே 23ல் ஊஞ்சல் உற்ஸவம், 24ல் தெப்ப உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.

Advertisement