அறிவியல் துளிகள்

01. பூமியிலிருந்து 2.7 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது மெஸஸியஸ் 63 எனும் நட்சத்திர மண்டலம். இதற்கு சூரியகாந்தி நட்சத்திர மண்டலம் என்றும் பெயர் உண்டு. சமீபத்தில், கனடா நாட்டைச் சேர்ந்த ரோனால்ட் ப்ரீசெர் எனும் விண்ணியல் ஆர்வலர் இந்த நட்சத்திர மண்டலத்தை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Tamil News
02. இதுவரை கிடைத்த தொல்லெச்சங்களைக் கொண்டு, முதன்முதலில் ஊர்வன உயிரிகள் தோன்றியது 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஓர் ஊர்வன உயிரியின் தொல்லெச்சத்தைக் கண்டெடுத்துள்ளனர். இது 35.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.
Latest Tamil News
03. சனியின் துணைக்கோளான டைட்டனின் வட அரைக்கோளத்தில் நிறைய ஏரிகள், கடல்கள் உள்ளன. தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் அங்கே மேகங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மீத்தேன், ஈத்தேன் ஆகியவை மழையாகப் பொழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Latest Tamil News
04. பூமியில் இருந்து 2,300 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது HW2 நட்சத்திரம். இது ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம். தற்போது நம் சூரியனை விட 20 மடங்கு பெரிதாக உள்ளது. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் இதன் நிறை இரண்டு வியாழன் கோள் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Latest Tamil News
05. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஒரு பறவை சூப்பர் ஸ்டார்லிங்ஸ். பொதுவாக 13 முதல்- 41 பறவைகள் வரை குழுவாக வாழும். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இவை மனிதர்கள் போலவே நண்பர்களை உருவாக்கிக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement