மே 23 முதல் 27 வரை பெங்., - பீதர் சிறப்பு ரயில்
பெங்களூரு: 'பொது மக்கள் வசதிக்காக, விஸ்வேஸ்வரய்யா முனையம் - பீதர் இடையே மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 06589: பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையம் - பீதர் சிறப்பு ரயில், மே 24, 26ம் தேதிகளில் விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:15 மணிக்கு பீதர் சென்றடையும்.
எண் 06590: பீதர் - விஸ்வேஸ்வரய்யா முனையம் சிறப்பு ரயில், மே 23, 25, 27 ம் தேதிகளில் பீதரில் இருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு வந்தடையும்.
ரத்துண
எண் 06509: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பீஹாரின் தானாபூர் வாராந்திர சிறப்பு ரயில், மே 26ம் தேதியும்;
எண் 06510: தானாபூர் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில், மே 28 ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.