மெட்ரோ நிலையங்களில் கழிப்பறைக்கு கட்டணம்

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில், கழிப்பறையை பயன்படுத்த கட்டணம் நிர்ணயித்திருப்பதால், பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கிய நாள் முதல், மெட்ரோ ரயில் நிலையங்களில், கழிப்பறையை இலவசமாக பயன்படுத்த பயணியருக்கு அனுமதி இருந்தது.

இப்போது திடீரென கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இனி மெட்ரோ ரயில் நிலையங்களில், கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த முடியாது.

சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய், மலம் கழிக்க ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பல்வேறு மெட்ரோ நிலையங்களில் ஏற்கனவே, கட்டண வசூல் துவங்கப்பட்டுள்ளது. இது பயணியருக்கு அதிருப்தி அளித்துள்ளது.

'ஏற்கனவே பயண கட்டணத்தை உயர்த்தியது. இப்போது இலவசமாக பயன்படுத்திய கழிப்பறைக்கு, கட்டணம் வசூலிக்க முற்பட்டது சரியல்ல. பயணியருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, மெட்ரோ நிறுவனத்தின் கடமையாகும். கழிப்பறையை பயன்படுத்த கட்டணம் விதிப்பதை நிறுத்த வேண்டும்' என, பலரும் வலியுறுத்துகின்றனர்.

Advertisement