பூசாரிகள் கூட்டம்

காங்கேயம், ::கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் வெள்ளகோவிலில் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், மாநில செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.


நலவாரிய உறுப்பினர் ஊக்கத்தொகை வழங்குவது, ஒரு கால பூஜை நடக்கும் கோவில் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு, பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க அரசு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்த, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு வருமானவரி சான்று ரத்து செய்ய வேண்டும்.
பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர். மாநில துணை செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ராஜகோபால், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள், வெள்ளகோவில் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement