ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் காரும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆந்திர மாநிலம் கடப்பா - ராயசோட்டி இடையே கூவுல செருவு மலைப்பாதையில் காரும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.



விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.


இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கார் முற்றிலுமாக நொறுங்கியது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement