புற்றுநோய் அறிகுறி: ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

ஜாம்ஷெட்பூர்:புற்று நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மன அழுத்தம் காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்டின் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் கிருஷ்ணகுமார், ஆதித்யபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கம்ஹாரியாவின் சித்ரகுப்த நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிருஷ்ணகுமார் 40, கம்ஹாாியாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகுமார் அவரது மனைவி டோலி தேவி 35, மற்றும் இரண்டு மைனரான மகள்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேரும் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
நாங்கள் விசாரணையை இன்று துவங்கியநிலையில், கிருஷ்ணகுமாருக்கு புற்று நோய் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன அழுத்தத்தில் இருந்த தாக அக்கம் பக்கத்தில் இருந்த சிலர், தெரிவித்தனர்.அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கிறோம்.
பிரேத பரிசோதனை மூலம் சரியான மரணத்திற்கான, காரணம் கண்டறியப்படும்.விசாரணை தொடங்கப்பட்டு, அனைத்து கோணங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
சோகம் என்ற பெயரில் நகைச்சுவை: ராகுல் மீது பா.ஜ., குற்றசாட்டு
-
தென்மேற்கு பருவ மழை எதிரொலி: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
-
கொச்சியில் கண்டெய்னர் கப்பல் மூழ்கியது; மாலுமிகளை மீட்கும் பணி தீவிரம்
-
கோடை காலத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
-
அமெரிக்கர்களிடம் தினமும் ரூ.25 லட்சம் மோசடி: புனேயில் போலி கால்சென்டர் மூடல்; 5 பேர் கைது
-
முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி