முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம்., பி.பார்ம்., பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்சி., (நர்சிங் மற்றும் விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டய மற்றும் பட்ட மேற்படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெற வேண்டும்.
முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, அடையாள அட்டை, சார்ந்தோரின் பள்ளி இறுதி சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம், ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் விதவையர் விண்ணப்பம் ஆகியவற்றை exwelvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து, சான்று பெறலாம்.
கடந்த கல்வியாண்டில் பெற்ற சார்ந்தோர் சான்றிதழை நடப்பு கல்வியாண்டில் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் கலந்தாய்வின்போது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மேலும், சந்தேகங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 04146 220524 தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்