மனைவி மாயம்: கணவர் புகார்

கடலுார் : கடலுாரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார், மஞ்சக்குப்பம் பட்டம்மாள் நகரைச் சேர்ந்தவர் நடராஜன்,54; இவரது மனைவி வனிதா,44; இவர், கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து வனிதாவை தேடி வருகின்றனர்.

Advertisement