பொறியியல் கல்லுாரியில் 10ம் ஆண்டு விழா

பண்ருட்டி : பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் 10வது ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு கல்லூரி புல முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார்.

விழாவில், துறைத் தலைவர்கள் மாலா, மங்கையர்கரசி, உமா, முருகானந்தன், ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை விளையாட்டு ஒருங்கிணைப்பாளார் சிவகார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement