திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சார்பில் மருத்துவ கல்லுாரி ஏற்படுத்த எதிர்பார்ப்பு

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் பக்தர்களின் வருகை, வருமானம் ஈட்டும் திறன் ஆகியவற்றில் முதன்மையாக இருப்பது, திருப்போரூர் கந்தசுவாமி கோவில்.
இக்கோவிலுக்கு வேண்டுதல் காரணமாகவும், திருமணம் செய்யவும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர்.
இக்கோவிலுக்கு சொந்தமாக திருப்போரூர், தண்டலம் உள்ளிட்ட இடங்களில், 600 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
கோவில் நிலம் குத்தகை ஏலம், பிரசாத கடை, வாகன நிறுத்தம், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், மொட்டை அடித்தல் என, பல கட்டணங்கள் வாயிலாக, ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.
கோவில் நிதியில் இருந்து, 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி, 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் என, மொத்தம் 3.36 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
அதேபோல், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், வருமானத்தை அதிகப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும், கூடுதல் திருமண மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி 6 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அளவில், 500 பேர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தடுக்க கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக புறவழிச்சாலையான ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி, முடியும் நிலையில், உள்ளது.
மேற்கண்ட ஆறுவழிச் சாலைக்காக, கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான இழுப்பீடு தொகையாக, கோவில் நிர்வாகத்திற்கு 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 145 கோடி ரூபாய் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையானது, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது
அந்த வகையில், மருத்துவக்கல்லுாரி அமைப்பதற்கான நிலப்பரப்பு, கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடம், உபகரணங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்த பணம் இருப்பு போன்ற அனைத்து வசதிகளும், கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் உள்ளன.
எனவே, கந்தசுவாமி கோவில் சார்பில் மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்தப்படுமா என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், திருப்போரூர் தாலுகாவில் அடங்கிய பகுதிகளில் பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகள் இருந்தாலும், அரசு சார்ந்த மருத்துவக் கல்லுாரி இல்லாதது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், கந்தசுவாமி கோவில் சார்பில் மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்த வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும்
-
கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழைப்பொழிவு!
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு