கூலிப்படையை ஏவி ராணுவ வீரர் கொலை?
சந்தவாசல்: ராணுவ வீரர் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வரும் நிலையில், மனைவி, மாமியார் தலைமறைவாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 34; ராணுவ வீரராக காஷ்மீரில் பணிபுரிந்தார். இவரது மனைவி சங்கீதா, 32. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராஜேஷ்குமார், மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடந்த 13ல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சின்ன அய்யம்பாளையம் பகுதியில் விவசாய கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ராஜேஷ்குமார் மதுபோதையில் கிணற்றில் விழுந்து இறந்ததாக, கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர். அதேசமயம், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜேஷ்குமாரின் தாய் சாந்தி, கண்ணமங்கலம் போலீசில் நேற்று புகாரளித்தார்.
போலீசார் விசாரித்து வரும் நிலையில், ராஜேஷ்குமாரின் மனைவி சங்கீதா, அவரது தாய் இந்திரா தலைமறைவாகினர். கூலிப்படையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும்
-
கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழைப்பொழிவு!
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு