விபத்தில் டாஸ்மாக் பணியாளர் பலி

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெரு பாலமுருகன் 44. கெங்குவார்பட்டி டாஸ்மாக் கடை பணியாளர். பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.

மே 12ல் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் முன்னாள் சென்ற டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்து நடந்தது. இதில் காயமடைந்த பாலமுருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் டி.என்.65 பி 2254 என்ற பதிவு எண் உள்ள டிராக்டரின் டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.-

Advertisement