வாகனம் மோதி ஒருவர் பலி

வேப்பூர் : வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.

வேப்பூர் அடுத்த கழுதுாரைச் சேர்ந்தவர் ராமசாமி, 50; சென்னை, கோயம்பேட்டில் கூலி வேலை செய்தார். நேற்று முன்தினம் கிராமத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க, சென்னையில் இருந்து பஸ் ஏறி நேற்று அதிகாலை வேப்பூர் வந்தார்.

அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, வேப்பூர் கூட்டுரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமசாமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement