திருக்குறள் கருத்தரங்கு  

புவனகிரி : புவனகிரியில் திருக்குறள் இயக்கம் சார்பில், திருக்குறள் கருத்தரங்கு நடந்தது.

புவனகிரி ராகவேந்திரர் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள் இயக்கத் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராபர்ட் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலர் ராஜமோகன் ராமானுதாசன் பேசினார்.

Advertisement