கார் மீது முறிந்து விழுந்த மரம் ஒரே குடும்பத்தில் மூவர் காயம்

சென்னிமலை: பெருந்துறை யூனியன் திங்களூர் ஊராட்சி பாண்டியம்பாளை-யத்தை அடுத்த குஞ்சரமடையை சேர்ந்தவர் ராஜசேகர், 49; லேத் மெக்கானிக், இவரது மனைவி செல்வி, 40; இவர்களது மகன் சஞ்சய் பிரதீஷ், 19; மூவரும் சென்னிமலை முருகன் கோவி-லுக்கு மாருதி 800 காரில் நேற்று
சென்றனர்.
தரிசனம் முடித்து விட்டு, 11:30 மணிக்கு சென்னிமலை - பெருந்-துறை சாலை தனியார் கல்லுாரி அருகில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியது. இந்நிலையில் சாலையோரமிருந்த ஒரு வாதநாராயணா மரம் முறிந்து கார் மீது
விழுந்தது.
இதில் ராஜசேகருக்கு இடது தொடையில் எலும்பு முறிவும், மற்-றவ இருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement