நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கி-ழமை நாட்டுக்கோழி சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார்,மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பல்-வேறு பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ப.வேலுார் பகுதி முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழி-லாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்பனையாகும். குறிப்பாக, அனைத்து கோழி கடைகளிலும் கூட்டம் அதிகளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும். கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. தற்-போது கிலோவுக்கு, 100 ரூபாய் கூடுதலாகி, 600 ரூபாய்க்கு விற்-றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement