தம்பதியர் பலிக்கு காரணமான பஸ் டிரைவர் 2 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து
திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே, செம்பாம்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் விவசாயி சண்முகம், 46; இவரது மனைவி ராஜலட்சுமி, 42; தம்பதியர் மகள் ராஜேஸ்வரி, 24; இவர்கள் மூவரும், கடந்த, 22 மாலை, 3:00 மணிக்கு, டூவீலரில் திருச்செங்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
வட்டூர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.எம்.பி.எஸ்., மற்றும் எம்.ஆர்.என்., ஆகிய இரு தனியார் பஸ்கள், போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்திக்கொண்டு சென்றது. அப்போது, எம்.ஆர்.என்., பஸ் எதிரே சாலை ஓரத்தில் வந்துகொண்டிருந்த சண்முகத்தின் டூவீலர் மீது மோதியது.இதில், சண்முகம், ராஜலட்சுமி ஆகிய இருவரும் உயி-ரிழந்தனர். மகள் ராஜேஸ்வரி படுகாயமடைந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீசார், நேற்று முன்-தினம் மாலை, எம்.ஆர்.என்., பஸ் டிரைவரான, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த வீரமணி மகன் முகில், 24, எஸ்.எம்.பி.எஸ்., பஸ் டிரைவரான, சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகு-தியை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ், 25, ஆகியோரை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய, திருச்செங்-கோடு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, போலீசார் பரிந்-துரை செய்தனர். அதையேற்று, நேற்று திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மோகனபிரியா, இரண்டு பஸ் டிரைவர்-களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்-டுள்ளார்.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!