கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சேந்தமங்கலம்,: விடுமுறை தினத்தையொட்டி, நேற்று கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் சுற்றுலா பய-ணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், இரண்டு வாரமாக நல்ல மழை பெய்தது. இதனால், இங்குள்ள ஆகாய கங்கை நீர்-வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று, பல்‍வேறு பகுதி-களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலை, 9:00 மணி முதல் இங்குள்ள அருவிகளில் வரிசையில் நின்று உற்சாக குளியல் போட்டனர். பின், அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் கோவிலில் தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், வாசலுார் பட்டியில் உள்ள படகு இல்லம், வியூ பாயின்ட்களுக்கு சென்று கொல்லிமலையின் அழகை ரசித்தனர்.

Advertisement