கூடைப்பந்து போட்டி

புதுச்சேரி, :புதுச்சேரி காது கேலாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான மூவர் கூடைப்பந்து போட்டி நடந்தது.

புதுச்சேரி மூத்திரையர்பாளையம் கூடைப்பந்து மைதானத்தில் போட்டி நேற்று நடந்தது. போட்டியை, ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். புதுச்சேரி, நெய்வேலி, நெய்வேலி டவுன்ஷிப், ஆரோவில், விழுப்புரம் ஆகிய ஐந்து அணிகள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் நெய்வேலி அணி முதலிடம் பெற்றது. விழுப்புரம் அணி இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி அணி மூன்றாம் இடத்தை பெற்றது.

காதுகேலாதோர் விளையாட்டு சங்க செயலாளர் பஷீர், விளையாட்டு துறை அதிகாரிகள் ஆனந்தன், சங்கர், நடுவர்களாக இருந்தனர். ஏற்பாடுகளை வாழிமுத்து, பிரகாஷ், பவித்ரன், ராஜேஷ், பரத் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement