குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டட கட்டுமான பணி தீவிரம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில், 7.38 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துரிதமாக நடந்து வருகிறது. 2023 நவ., 30ல், பணி உத்த-ரவு பிறப்பிக்கப்பட்டு, 2024 பிப்., 15ல் ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. 12 மாதங்களில் பணிகள் முடிவடையும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.


தற்போது, கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளது. தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதுமான இடவசதி இல்லாமல், பொது-மக்கள், கடை வைத்துள்ளவர்கள், பஸ் டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விரைவில் கட்டுமான பணி முடிந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement