2 பெண்களுக்கு வரதட்சனை கொடுமை: 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 பெண்களிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பவித்ரா, 27, இவருக்கும், மூலக்குளத்தை சேர்ந்த விஷால் துாயவன், 30, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், பவித்ராவை, அவரது கணவர், மாமனார் முத்துசாமி, 57, மாமியார் ஷீலா, 52, உறவினர், வர்ஷா, 23 ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சனைகேட்டு கொடுமை செய்து, வீட்டை வீட்டு அனுப்பினர்.
இதுகுறித்து, பவித்ரா, வில்லியனுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, கணவர் விஷால் துாயவன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல, திருக்கனுார் பகுதியை சேர்ந்த ரோஜா, 22, அதே பகுதியை சேர்ந்த முகமது ரபி, 30, இவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின், முகமது ரபி வேலைக்காக வெளிநாடு சென்றார். இந்நிலையில், பெண்ணின் மாமனார், முகமது இக்பால், 65, மாமியார் சர்பனிசா, 57, உறவினர் பஜிலா ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர்.
இதுகுறித்து, அப்பெண், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, உடந்தையாக இருந்த கணவர் முகமது ரபி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை