பனிப்பொழிவால் ஏற்காடு 'ஜிலுஜிலு'; பயணிகள் 'குளுகுளு' கண்காட்சியில் நெகிழ, ரசிக்க, வியக்க வைத்த நாய்கள்
சேலம்,: கோடை விழாவை ஒட்டி ஏற்காட்டில் செல்லப்பிராணி கண்-காட்சி களைகட்டியது. அதேநேரம் ஏராளமானோர் குவிந்ததால், மலைப்பாதை, ஏற்காட்டின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஊர்ந்தபடி சென்று சிரமத்துக்கு ஆளாகினர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 48வது கோடை விழா, மலர் -காட்சி கடந்த, 23ல் தொடங்கியது. இரு நாட்களாக, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். ஞாயிறான நேற்றும், அதிகாலை முதலே சுற்றுலா பயணியர் வரத்தொடங்கினர். அடிவார சோத-னைச்சாவடியில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அண்ணா பூங்காவில், மலர் காட்சியை காண ஏராளமான சுற்-றுலா பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடும்பத்துடன் கண்டுகளித்தனர். பூக்களால் உருவான மேட்டூர் அணை, 16 கண் மதகு, காட்டெருமை, முயல், குரங்கு, மான் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ரசித்தனர். கார்டூன் உருவங்களை பார்த்து குழந்-தைகள் குதுாகலம் அடைந்தனர். பலரும் குடும்பத்துடன், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
படகு இல்லம், ஏரி, மான் பூங்காக்கள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பய-ணியர் கூட்டம் களைகட்டியது. காலை, 11:00 மணி அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு இதமான சீதோஷ்ண நிலை காணப்பட்-டது. இதனால் ஏற்காடு ஜிலுஜிலுவாக மாற, பயணிகள் குளுகுளு-அனுபவத்தை பெற்றனர்.
செல்லப்பிராணிகள் கண்காட்சி
ஏற்காடு கலையரங்கம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடந்தது. பொமரே-னியன், ஜெர்மன் ெஷப்பர்ட், டாபர்மேன், பக், புல்டாக், பாக்சர், காக்கர் ஸ்பேனியல் டேசன் போன்ற வெளிநாட்டு இனங்கள், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற உள்நாட்டு நாய்களை, சுற்றுலா பயணியர் அழைத்து வந்தனர். பற-வைகள், பூனைகள், மாடுகளும் கொண்டு வரப்பட்டன. எஜமா-னர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்ட நாய்களை பார்த்து சுற்றுலா பயணியர் ஆரவாரம் எழுப்பினர். ஜே.எஸ்.டபுள்யு நிறுவனம் சார்பில், மகாராஜா குழுவினர் அழைத்து வந்த நாய்கள், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கண்டறிதல், வெடிகுண்டு பெட்டியை மோப்பம் பிடித்து கண்டு பிடித்தல், கொலை செய்யப்பட்ட இடங்களில் உள்ள தடயங்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றை செய்து காட்டி வரவேற்பை பெற்றன.
நடைபயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த எஜமானரை காப்-பாற்ற, அவரது மார்பு பகுதியில் காலை வைத்து அழுத்தி முகத்தை தடவி கொடுத்து, முதலுதவி பெட்டியை கொண்டு வந்து தந்த ஒரு நாய், பார்த்தவர்களின் மனதை நெகிழ செய்தது. ஒருவர், 3ம், 3ம் எவ்வளவு என கேட்க, நாய், 6 முறை குரைத்-தது. அதேபோன்று கூட்டல், கழித்தல் படி கேட்க, அதன் எண்-ணிக்கையை குரைத்து காட்டியும் அசத்தின. நாய்களின் பாசம், நுண்ணறிவு, சொல் படி நடத்தல் போன்ற செயல்களை பார்த்த பலர் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
கீழ்படிந்த நாய்களால், அதன் உரிமை
யாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு இன பூனை, கிளிகள் உள்ளிட்டவையும் கண்காட்சிக்கு அழகு சேர்த்-தன. தொடர்ந்து கலையரங்கில் சுற்றுலாத்துறை சார்பில் நடன நிகழ்ச்சி, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் பம்பை இசை, மிமிக்ரி, ஆர்கெஸ்ட்ரா நடந்தது. காலை முதலே படகு இல்-லத்தில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர். கூடுதல் படகுகளை இயக்காதது, பலரை ஆச்சர்யப்பட வைத்தது.
போக்குவரத்து நெரிசல்
கடந்த இரு நாட்களை விட, நேற்று சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை அதிகரித்திருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில், அஸ்தம்-பட்டி வழியே ஏற்காடு செல்லவும், அங்கிருந்து இறங்க, குப்-பனுார் வழியே செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏற்-காடு செல்லவும், இறங்கவும், பலரும் அஸ்தம்பட்டி வழியையே பயன்படுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. பஸ், லாரி, வேன்-களும் மலைப்பாதையில் வந்தது, நெரிசலுக்கு மேலும் வழிவகுத்-தது. போக்குவரத்து மாற்றம் குறித்து, சுற்றுலா பயணியருக்கு தெரிவிக்கவோ, அறிவிப்பு பலகை வைத்து கண்காணிக்கவோ போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏற்காட்டின் முக்கிய சாலைகள் அனைத்தும்
போக்குவரத்து நெரிசலால் தவித்தன.
இன்று என்ன?
கோடை விழாவில், இன்று காலை, 10:00 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ரெட்-டிரீட் மைதானத்தில் அரசு அலவலர்கள், மக்களுக்கு குண்டு எரிதல் போட்டி நடக்கிறது.
தொடர்ந்து தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு இல்-லத்தில் படகுப்போட்டி நடக்கிறது. சுற்றுலாத்துறை சார்பில் ஏற்-காடு கலையரங்கில் கலைமாமணி இறையன்பன் குத்துாஸின் இன எழுச்சி பாடல், சென்னை நாட்டியகலா மந்திர் கலைப்பள்-ளியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பாலக்காடு மோகினி ஆட்டம், பப்பெட் ேஷா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
அசத்திய
போலீஸ் நாய்கள்
ஏற்காட்டில் நடந்த கண்காட்சியில், 78 நாய்கள், 32 கால
்நடைகள் பங்கேற்றன. சிறப்பு காட்சிகளாக, போலீஸ் புல-னாய்வு பிரிவு, மாநகர போலீஸ், எஸ்.பி., அலுவலகம், ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய சிறை ஆகியவற்றுக்கு சொந்தமான நாய்களும் பங்கேற்றன. பல்வேறு பிரிவுகளில் நடந்த சாகச நிகழ்ச்-சியில், எஸ்.பி., அலுவலகத்தை சேர்ந்த ஜெர்மன் ெஷப்பர்ட்; சேலம் மாநகர போலீஸ் துறையின் டாபர்மேன்; சேலம், சீலநாயக்-கன்பட்டி சுரேஷூக்கு சொந்தமான நாய்; ஈரோடு ஹரிஹரசுத-னுக்கு சொந்தமான கோல்டன் ரெட்ரீவர்; ஏற்காட்டை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு சொந்தமான நாய்; ஜே.எஸ்.டபுள்யு., நிறுவ-னத்தை சேர்ந்த பெல்ஜியன் மாலினோயிஸ்; ஏற்காட்டை சேர்ந்த மோகனுக்கு சொந்தமான பாரசீக பூனை ஆகியவை முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, ஏற்காடு, திரி-வேணி எஸ்டேட்டின், ஜெர்மன் ெஷப்பர்ட் வென்றது.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!