கண்காணிப்பு கேமரா காட்சிப் பொருளானது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
சேத்தியாத்தோப்பில் நகை கடைகள், வணிக வளாகங்கள், வங்கிகள், சிறிய பெட்டி கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டுகளை கண்டு பிடிப்பதற்கும், விபத்துகள் ஏற்படுத்தி செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையிலும் வணிகர்கள் பங்களிப்புடன் போலீசார் கேமராக்களை பொருத்தினர்.
சேத்தியாத்தோப்பில் ராஜிவ் காந்தி சிலை ரவுண்டானா, குறுக்குரோடு, பஸ் ஸ்டாண்டு, சந்தைத்தோப்பு செல்லும் வழி, வடக்கு மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சில ஆண்டுகளிலேயே போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதானது. இதனால் கேமராக்கள் பொருத்த பயன்படுத்திய கம்பங்கள் காட்சிப் பொருளாகவே உள்ளது. குறிப்பாக, கடை வீதியில் கம்பம் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கேமரா பொருத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை