காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்தாதீங்க!
வால்பாறை; வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு, காந்தி சிலை வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சமீப காலமாக காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக, தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை்களில் கட்சிக்கூட்டம் நடத்தப்படுவதால், பஸ்கள் காந்திசிலை வளாகம் வருவதில்லை. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிகளவில் வால்பாறை நகருக்கு வருகின்றனர். அப்போது, காந்தி சிலை வளாகத்தில் கட்சியினர் கூட்டம் நடத்துவதால், பஸ்கள் காந்திசிலை வருவதில்லை.
இதனால், வாரத்தில் ஒரு நாள் வால்பாறைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் நிரந்தமாக தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை