காதணி விழாவில் பழனிசாமி வாழ்த்து

பொள்ளாச்சி; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் ஆகியோரின் இல்ல காதணி விழா, பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி வேல் மஹாலில் நடந்தது.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, குழந்தை மகிழினி ஆதித்யாவை வாழ்த்தினார். இதேபோல, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செங்கோட்டையன், கடம்பூர்ராஜூ, செல்லுார்ராஜூ, விஜயபாஸ்கர், தாமோதரன், செல்வராஜ், காமராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.

விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதிசீனிவாசன் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement