விடுபட்ட பயனாளிகள் பட்டியல் சேகரிப்பு

உடுமலை; துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு, அவரவர் குடியிருப்புகளில் கழிப்பறை கட்டுவதற்கு 12 ஆயிரம் மானியத்தொகை அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் சில கிராம ஊராட்சிகளில் நுாறு சதவீதம் இத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இருப்பினும், குடியிருப்புகள் அதிகரிக்கும் ஊராட்சிகளில், ஒவ்வொரு நிதியாண்டிலும் விடுபட்ட குடியிருப்புகள் பட்டியல் எடுக்கப்பட்டு, ஒன்றிய நிர்வாகங்களின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படுகிறது. அதில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்டியல் தயார் செய்வதற்கு, ஒன்றிய நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

Advertisement