அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
பெ.நா.பாளையம்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூரில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் பார்வையிட்டார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த நிலையில் உள்ள இம்மையத்தில் ஏராளமான குழந்தைகள் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்படுகின்றனர்.
பழுதான நிலையில் உள்ள இக்கட்டடத்தை அகற்றிவிட்டு, புதியகட்டடத்தை கட்ட வேண்டும் என, 22ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
இது குறித்து, எம்.எல்.ஏ., அருண்குமார் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் உறுதி தன்மையை தகுந்த சிவில் இன்ஜினியர்களை கொண்டு ஆய்வு செய்தபின், அங்கன்வாடி மையம் பழுது பார்ப்பு அல்லது புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணி நடப்பாண்டில் துவக்கப்படும் இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!