கோடை விடுமுறை நிறைவு; பள்ளிகள் திறப்பதில் தீவிரம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், ஜூன், 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள், கல்வித்துறை சார்பில் நடந்து வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 72 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இது தவிர, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளன. அனைத்து அரசு பள்ளிகளும், ஜூன், 2ம் தேதி திறக்க, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை, மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், மாணவர்கள் பயன்படுத்தும் இடங்கள் தூய்மையாகவும், தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சரி பார்த்து தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முதல் நாளில், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
இதில், தாமதமோ, தொய்வோ இருக்கக் கூடாது என, அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே போல, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடர்ந்து பல்வேறு பிரசார நடவடிக்கைகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்.
பள்ளிகளில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அறிவிப்பு பலகை பள்ளியின் முன்புறம் வைக்க வேண்டும் எனவும், தமிழக அரசு, அரசு பள்ளி நிர்வாகங்களுக்கு, அறிவுரை வழங்கி உள்ளது.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!