மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி கண்ணம்பிரா பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன், 50. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், ஸ்கூட்டரில் பூளிங்கூட்டம்- தெக்கேத்தறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இதில் தலையில் படுகாயமடைந்த உண்ணிகிருஷ்ணனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து, வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உண்ணிகிருஷ்ணன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
Advertisement
Advertisement