இருவேறு விபத்துகளில் இருவர் பலி
சூலுார்,; சூலுார் மற்றும் சுல்தான்பேட்டையில் நடந்த இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகினர்.
கருமத்தம்பட்டி அடுத்த சேட பாளையத்தை சேர்ந்தவர் ஜேனட் பீனா, 28. தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். உடன் பள்ளி மாணவியும் சென்றார்.
அவிநாசி ரோட்டில் சென்றபோது, சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஆசிரியை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சூலுார் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உடுமலைப்பேட்டை அடுத்த கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் நகுல் பிரனேஷ், 19. கல்லுாரி மாணவர். இவர் தனது காரில் செஞ்சேரிமலை கிரிவல பாதை வழியே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டின் ஓரத்தில் இருந்த கண்ணம்மாள் என்பவரது வீட்டின் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர்.
சூலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நகுல் பிரனேஷ் உயிரிழந்தார். கண்ணம்மாள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!