மீண்டும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

பனமரத்துப்பட்டி,: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்தது. இதனால் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
கடந்த மாத இறுதியில் பணி முடிந்து, மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து சோதனை ஓட்டமாக தொடங்கியது. ஆனால் கடந்த வாரம், சேலத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளியூர் செல்லும் வாகனங்கள், மீண்டும் கிழக்கு சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.
மேம்பால சாலை மூடப்பட்டு, தார் ஊற்றி, 'சீல் கோடு' போட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளியூரில் இருந்து சேலம் வரும் வாகனங்கள் மீண்டும் மேற்கு சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. சீரமைப்பு பணிக்கு மேம்பால சாலை மூடப்பட்டது.
சர்வீஸ் சாலை இரு வழிப்பாதை என்பதால், வாகனங்கள் எதி-ரெதிரே வருகின்றன. இதனால் நெரிசல் ஏற்பட்டு, விபத்து அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement