வாரச்சந்தையை நாடும் மக்கள்; வசதி கோரும் வியாபாரிகள் !

கோவையில், திங்கள் முதல் ஞாயிறு வரை, வாரத்துக்கு ஒரு நாள் என்ற கணக்கில், ஒவ்வொரு பகுதியிலும் சந்தை போடப்படுகிறது.
ஒரே கூடாரத்தின் கீழ் அனைத்தும் கிடைப்பதால், அருகே வசிப்பவர்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இது அலைச்சலை தவிர்த்து, தேவையை பூர்த்தி செய்கிறது. அதுவும் அன்றைய தினம் 'பிரெஷ்' ஆகவும், மார்க்கெட்டில் கிடைப்பதை விட சற்று குறைந்த விலையிலும் கிடைப்பதால் மக்கள் மட்டுமின்றி, கடை வியாபாரிகளும் அடித்துப்பிடித்து வாங்குவதுண்டு. புலியகுளம், ராமநாதபுரம் அருகே மருதுார், ஒலம்பஸ் அருகே, 80 அடி ரோடு, காந்திமாநகர், கணபதி அத்திபாளையம் பிரிவு, வேடபட்டி அருகே குரும்பபாளையம், வடவள்ளி, விளாங்குறிச்சி, எல்.ஐ.சி.,காலனி, மாச்சம்பாளையம், சிங்காநல்லுார் அடுத்த ஆனையங்காடு ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலம் அருகே என, மாநகரின் முக்கிய இடங்களில் இச்சந்தை நடக்கிறது.
இதனால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. மழைக் காலத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி, பொது மக்களும் சேறும், சகதியும் மிக்க இடங்களில் அமைந்துள்ள வாரச்சந்தைகளால் அவதிப்படுகின்றனர். இச்சூழலில், பள்ளி விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில், விடுமுறை நாட்களில் வாரச்சந்தைகள் அமைக்க மாநகராட்சி அனுமதித்தால், மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு குறையும். தங்குதடையின்றி வியாபாரமும் நடக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!