அகில இந்திய கூடைப்பந்து போட்டி
கரூர்: கரூரில் நடக்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், ஐ.ஓ.பி., சென்னை, சவுத் வெஸ்டர்ன் ரயில்வே, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.
கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி., நாயுடு சுழற்-கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. வரும், 27 வரை போட்டி நடக்கிறது. இதில், நேற்று நடந்த ஆண்கள் பிரிவு போட்டியில் ஐ.ஓ.பி., சென்னை, இந்-தியன் ஏர் போர்ஸ் அணிகள் மோதின. அதில், 76க்கு, 67 என்ற புள்ளி கணக்கில் ஐ.ஓ.பி., சென்னை அணி வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே, கேரளா போலீஸ் அணிகள் மோதின. அதில், 54க்கு, 48 புள்ளி கணக்கில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணி வெற்றி பெற்றது.
ஆண்கள் பிரிவில், இந்தியன் வங்கி, இந்தியன் நேவி அணிகள் மோதின. அதில், 78க்கு, 60 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் வங்கி வெற்றி பெற்றது.
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்