ஸ்ரீசீதா கல்யாண மஹா உற்சவம்

திருப்பூர்; ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீசீதா கல்யாண மஹா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பூர், ஓடக்காடு காவேரி வீதியில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்துக்கு உட்பட்ட, ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடம் செயல்பட்டு வருகிறது. உலக நலன் வேண்டி, ஸ்ரீசீதா கல்யாண மஹா உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது.

காலையில் அஷ்டபதி பஜனை; மாலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனை, ஸ்ரீகணேசர் கீர்த்தனைகள், திவ்யநாம பஜனை ஆகியன நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி, 9:00 மணிக்கு ஸ்ரீவசந்த மாதவ பூஜை, 9:30 மணிக்கு, கொட்னோத்ஸவ வழிபாடுகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, ஸ்ரீசீதா கல்யாண மஹா உற்சவம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு வசந்த மாதவ வீதி பூஜையும், வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு, கோனாங்கிதாசர் சேவை, ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவம், மஹா தீபாராதனை ஆகியன இடம்பெற்றன.

மஹா உற்சவத்தையொட்டி, தஞ்சாவூர் ஸ்ரீராஜேஷ் பாகவதர் கோஷ்டியினரின், பாகவத பஜனை நடந்தது.

Advertisement