'நிட்ஜோன் -2025' கண்காட்சி இன்று நிறைவு

திருப்பூர்; திருப்பூரில், 2வது முறையாக நடைபெற்று வரும், 'நிட்ஜோன் -2025' கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறு கிறது.

தொழில்நுட்ப பகிர்வுக்காக, 'நிட்ஜோன் டிரேடு எக்ஸ்போ' நிறுவனம் மூலம், பின்னலாடை துறைக்கான இயந்திரங்களை காட்சிப்படுத்தியுள்ள, 'நிட்ஜோன் -2025' கண்காட்சி திருப்பூர், வேலன் ஓட்டல் வளாகத்தில் கடந்த 23ல் துவங்கியது.

மொத்தம் 150 ஸ்டால்களுடன், 'நிட்டிங்', 'பிரின்டிங்', 'எம்ப்ராய்டரிங்', நவீன துணிகளை வெட்டும் இயந்திரங்கள், பின்னலாடை உற்பத்திக்கான தையல் இயந்திரங்கள், பனியன் துணி ரகங்கள் மற்றும் ஆடை உற்பத்திக்கான மதிப்பு கூட்டு உபபொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமும் காலை, 10:00 முதல், இரவு, 7:30 மணி வரை நடந்து வருகிறது. கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகையில், 'தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தொழில்துறையினர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு 'ஸ்டால்'களிலும், பரபரப்பாக வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. கண்காட்சி நாளை (இன்று) நிறைவு பெறுவதால், திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் கண்காட்சியை பார்வையிட்டு, பயன்பெறலாம்,' என்றனர்.

Advertisement