துணை ராணுவ படை கட்டுப்பாட்டில் வங்கதேச தலைமை செயலகம்

டாக்கா: வங்கதேச அரசு ஊழியர்கள் புதிய பணி சட்டத்துக்கு எதிராக நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் டாக்காவில் உள்ள தலைமைச் செயலகத்தை சுற்றி துணை ராணுவப் படையை அரசு குவித்தது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இங்கு உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தக்கோரி ராணுவ தளபதியும், எதிர்க்கட்சிகளும் அரசின் தலைமை ஆலோசகரான யூனுசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் புதிய பணி சட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த சட்டம் முறைகேடு உள்ளிட்ட தவறான நடத்தையில் ஈடுபடும் அதிகாரிகளை எளிதாக பணி நீக்கம் செய்ய வழி செய்கிறது.
இந்த சட்டத்துக்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி காய்களை நகர்த்த ராணுவ தளபதி வாக்கர் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதனால் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அமைச்சர்களின் வீடுகள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் துணை ராணுவப் படைகள் ஆயுதங்களுடன் நேற்று குவிக்கப்பட்டனர்.
பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும்
-
பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்; ராஜினாமா கடிதத்தில் டுவிஸ்ட்
-
ராமதாஸ்- அன்புமணி மோதல் பின்னணி: பா.ம.க.,வினர் அதிர்ச்சி!
-
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
-
கமலுக்கு மிரட்டல்; முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்: சீமான் கேள்வி
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்: ஆசிரியர் டூ நடிகர்: ‛‛அந்த 7 நாட்கள்'' ராஜேஷின் வாழ்க்கை பயணம்
-
உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஜெர்மனி ; அதிபர் மெர்ஸ் எடுத்த முடிவு