கிராமத்தில் புலி நடமாட்டம் அச்சத்தில் கிராம மக்கள்

கோத்தகிரி : 'கோத்தகிரி கம்பட்டி கிராமத்தில், புலி நடமாடுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என, வனத்துறை வலியுறுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம், கட்ட பெட்டு வனச்சரகம், கம்பட்டி கிராமத்தில், நேற்று காலை, 6:30 மணியளவில், தேயிலை எஸ்டேட் வழியாக புலி வந்துள்ளது. சாலையில் நின்றிருந்த புலி, சற்று நேரம் நின்று எஸ்டேட் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த காட்சி அப்பகுதியில் இருந்த, சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.


வனத்துறையினர் கூறுகையில், 'எப்பநாடு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி, இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளது. கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புலி மீண்டும் வந்தால் தகவல் தர வேண்டும்,' என்றனர்.

Advertisement