டாடா ஆல்ட்ரோஸ் நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக் கார்

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'ஆல்ட்ரோஸ்' ஹேட்ச்பேக் காரை முதல் முறையாக மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது.
மொத்தம் நான்கு மாடல்களில் வரும் இந்த கார், பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி., ஆகிய மூன்று இன்ஜின்களில் கிடைக்கிறது.
டீசல், சி.என்.ஜி., வகை கார்கள், மேனுவல் கியர்பாக்ஸில் கிடைக்கின்றன. பெட்ரோல் வகை கார், மேனுவல், ஏ.எம்.டி., - டி.சி.டி., ஆகிய மூன்று கியர் பாக்ஸ்களில் கிடைக்கிறது.
மறுசீரமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய எல்.இ.டி., ஹெட் லைட் மற்றும் டி.ஆர்.எல்., லைட்டுகள், 'இன்பினிட்டி' கனெக்டட் டெயில் லைட்டுகள், 16 அங்குல டூயல் டோன் அலாய் சக்கரங்கள், 'ப்ளஷ்' டோர் ஹேண்டல்ஸ் ஆகியவை புதிய வெளிப்புற மாற்றங்கள்.
உட்புறத்தில், 10.25 அங்குல டூயல் டிஸ்ப்ளே, 8 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம், சன் ரூப், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், 65 வாட் சி - டைப் பாஸ்ட் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், ஏர் ப்யூரிபையர் உட்பட பல அம்சங்கள் வந்துள்ளன.
ஆறு காற்றுப்பைகள், குழந்தைகளுக்கான சீட் இணைப்பு, கார் கட்டுப்பாட்டுக்கு இ.எஸ்.பி., வசதி ஆகியவை அடிப்படை அம்சங்களாக வந்துள்ளன.
இன்ஜின் பொறுத்த வரை, 1.2 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - சி.என்.ஜி., 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார், ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் முன்பதிவு, ஜூன் 2 முதல் துவங்குகிறது.
இன்ஜின்: 1.5 லிட்டர், என்.ஏ., டீசல்
பவர் - 88 ஹெச்.பி., 90 ஹெச்.பி.,
டார்க் - 170 என்.எம்., 200 என்.எம்.,
மைலேஜ் - 19 கி.மீ., 24 கி.மீ.,
பூட் ஸ்பேஸ் - 345 லிட்டர் (சி.என்.ஜி., - 210 லிட்டர்)
மேலும்
-
பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுரை
-
மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
-
இபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு
-
நைஜீரியாவில் வெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்!
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய சீனா: டிரம்ப் கண்டனம்