ஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி

ரோசாரியோ: ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி -3-1 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் உருகுவேயை வென்றது.
அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 5வது போட்டியில் உருகுவே அணியை மீண்டும் சந்தித்தது.
விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு துணை கேப்டன் ஹினா (10வது நிமிடம்), லால்ரின்புய் (24வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பின் போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் கீதா, கனிகா, லால்தான்ட்லுவாகி தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
நாடு முழுவதும் 4026 பேருக்கு கொரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 5 பேர் பலி