மல்யுத்தம்: உதித் 'வெள்ளி'

உல்லன்பட்டர்: மங்கோலிய மல்யுத்த போட்டியில் இந்தியாவின் உதித் வெள்ளி வென்றார்.
மங்கோலியாவில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் உதித், மங்கோலியாவின் துமென்பிலெக் மோதினர். இதில் ஏமாற்றிய உதித் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், துருக்கியின் பெகிர் கேசர் மோதினர். இதில் அமன் 12-2 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மற்ற எடைப்பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் அசத்திய இந்தியாவின் அமித் (79 கிலோ), விக்கி சாகர் (97) வெண்கலம் வென்றனர். இந்திய வீரர் ராகுல் (57) மட்டும், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்தார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 6 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
நாடு முழுவதும் 4026 பேருக்கு கொரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 5 பேர் பலி