இந்தியாவுக்கு 8 பதக்கம்: தாய்லாந்து குத்துச்சண்டையில்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 8 பதக்கம் கிடைத்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது. ஆண்களுக்கான 75 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் தீபக், உஸ்பெகிஸ்தானின் அப்துரகிமோவ் ஜாவோகிர் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய தீபக் 5-0 என வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நமன் 4-1 என சீனாவின் ஹான் சூயிஜென்னை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 80+ கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் கிரண் 2-3 என கஜகஸ்தானின் யெல்டானா தலிபோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
அரையிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் தமன்னா (51 கிலோ), பிரியா (57 கிலோ), சஞ்சு (60 கிலோ), சனே (70 கிலோ), லால்பக்மாவி ரால்தே (80 கிலோ) வெண்கலம் வென்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்