புனேயிடம் வீழ்ந்தது மும்பை: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் புனே அணி 9-6 என, மும்பை அணியை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் புனே, மும்பை அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் லிலியன் பார்டெட், அல்வாரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் பார்டெட் 2-1 என வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெர்னாடெட் சோக்ஸ் (மும்பை) 2-1 என டினா மெஷ்ரெப்பை (புனே) வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் (மும்பை) ஜோடி 1-2 என டினா மெஷ்ரெப், அனிர்பன் கோஷ் (புனே) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் அனிர்பன் கோஷ் (புனே), ஆகாஷ் பால் (மும்பை) மோதினர். இதில் அனிர்பன் 2-1 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் புனேயின் ரீத் ரிஷ்யா 3-0 என மும்பையின் ஸ்வஸ்திகா கோஷை வீழ்த்தினார். முடிவில் புனே அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு