டேபிள் டென்னிஸ்: டில்லி அபாரம்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஏமாற்றிய கோவா அணி 6-9 என, டில்லியிடம் தோல்வியடைந்தது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவா, டில்லி அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் டில்லியின் கியூக் இசாக் 3-0 என, கோவாவின் தியாகோ அப்போலோனியாவை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா அணியின் ஜெங் ஜியான் 3-0 என தியாவை (டில்லி) தோற்கடித்தார். கலப்பு இரட்டையரில் மரியா ஜியாவோ, சத்யன் ஜோடி (டில்லி) 2-1 என ஜெங் ஜியான், ஹர்மீத் தேசாய் ஜோடியை (கோவா) வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஏமாற்றிய சத்யன் (டில்லி) 1-2 என ஹர்மீத் தேசாயிடம் (கோவா) வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் டில்லியின் மரியா ஜியாவோ 3-0 என சாயாலி வானியை (கோவா) தோற்கடித்தார்.


முடிவில் டில்லி அணி 9-6 என வெற்றி பெற்றது.

Advertisement